மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்னும் அருள்வாக்கிற்கிணங்கச் சைவ சமயத்தின் பிரமாண நூல்களாக அமையும் வேதம் சிவாகமம், பன்னிரு திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் ஆகிய அருள் நூல்களில் சொல்லப்பட்ட வைதீக சைவ மரபுகளைப் பேணிக்காப்பதோடு அம்மரபுகள் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் சென்றடைய பணிகள் செய்தல்.
ஒருங்கிணைக்கப்பட்டுவரும் சிவ புண்ணிய பணிகள் சிவாலயம் அமைந்துள்ள ஊர்கள் தோறும் சிவாலய பராமரிப்புக் குழுக்களை உருவாக்க ஒத்துழைத்தல்.
வாரம் தோறும் சிவாலய உழவாரப்பணி மேற்கொள்ளல்.
தக்க ஓதுவாமூர்த்திகளைக்கொண்டு நடத்தப்படும் திருமுறை வகுப்புகளை ஒருங்கிணைத்தல்.
சைவ சித்தாந்த வகுப்புகள் பலரையும் சென்றடைய பணி செய்தல்.
திருக்கயிலாய வாத்தியம் இசைக்கும் அடியார் குழுக்களைக் கிராமம் தோறும் உருவாக்கல்.